திருச்செங்கோடு, ராசிபுரத்தில் காங்கிரசார் திடீர் ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு, ராசிபுரத்தில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்திக்கு சிறை
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநில சூரத் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்து, ராகுல்காந்தியை பா.ஜனதா பழிவாங்குவதாக கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில நிர்வாகி தங்கவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ராமசாமி மற்றும் கோவிந்தன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்
ராசிபுரம் பழையபஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமுலு முரளி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சீனிவாசன்முன்னிலை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சுந்தரம், கவுன்சிலர் லலிதா பாலு, நிர்வாகிகள் பழனிச்சாமி, ஜெயபால், மதுரை வீரன், அத்தனூர் நகர காங்கிரஸ் தலைவர் பூபதி, பிள்ளாநல்லூர் பேரூர் நகர தலைவர் சண்முக சுந்தரம், மகளிர் காங்கிரஸ் செயலாளர் மகேஸ்வரி, ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களைஎழுப்பினர்.






