பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 என பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார் பட்டி பால் சொசைட்டி முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அங்குள்ள கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சதாசிவம் தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து மாவட்ட உதவி செயலாளர் ஜோதி பேசினார். இதில் திரளான பால் உற்பத்தியாளர்கள் பசு மாடுகளுடன் கலந்து கொண்டனர்.


Next Story