கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணை செயலாளர்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் சாந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், சரவணன், கோவிந்தராஜ், மாநில துணை தலைவர் மஞ்சுளா உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.