தர்மபுரியில் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தேசிய ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் குப்புசாமி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பெருமாள், கேசவன், அஞ்சலக ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எல்.ஐ.சி. ஓய்வூதியர் அமைப்பின் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியை வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story