கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 7:00 PM GMT (Updated: 26 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன் பேசினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். 1.1.2023 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில் குமரேசன் நன்றி கூறினார்.


Next Story