நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் எல்லப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பெருமாள் கவுண்டர், சின்னசாமி, இந்திராணி, ராஜேந்திரன், தனபால், கோவிந்தன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய நிர்வாகி வேலுசாமி நன்றி கூறினார்.


Next Story