தர்மபுரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிறு கண்ணன் வரவேற்றார். கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளர் காவேரிவர்மன், பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்கர் படுகொலையை கண்டித்தும், கொலை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி நகர தலைவர் ஜிம்சக்தி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டியன், சிறுபான்மை மாவட்ட தலைவர் செபாஸ்டின், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமார், பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர்கள் சரவணன், பார்த்திபன், மாவட்ட துணைத் தலைவர் மாது மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story