நாமக்கல்லில்பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், ரவி, மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பா.ஜ.க. மாநில நிர்வாகி படுகொலையை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பை விட, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நகர தலைவர் சரவணன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், மகளிர் அணி நிர்வாகிகள் சுகந்தி, லலிதா, விவசாய அணி நிர்வாகி காளியப்பன், வக்கீல் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.