கிருஷ்ணகிரியில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி மற்றும் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட அவைத்தலைவர் ராமன், கவுரவ தலைவர் வெங்கட்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் தீபம்மா, மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஸ்வநாத், கொள்கை பரப்பு செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. இதை தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டர் அலுவலகத்தில் சங்கத்தினர் வழங்கினர்.


Next Story