நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கு சரக்குகளை ஏற்றி, இறக்கும் பணியில் 58 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெட்டிக்கு தற்போது 5 ரூபாய் 50 காசுகள் வீதம் கூலி வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.8 ஆக உயர்த்தி வழங்கக்கோரி டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story