மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டுமகிளா காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்


மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டுமகிளா காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டத் துணை தலைவர்கள் விஜயா, வனிதா, மாவட்ட பொருளாளர் பூங்கொடி, மாவட்ட செயலாளர் மாதம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தின் போது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு ஏராளமான பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், நரேந்திரன், சண்முகம், மாவட்ட பொதுச் செயலாளர் குமரவேல், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் முத்து, ராஜாங்கம், ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் முருகவாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஐ.என்.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.


Next Story