பாளையம் புதூரில் சாக்கடை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பாளையம் புதூரில் சாக்கடை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி கழிவுநீர் செல்லும் வகையிலும், குடியிருப்புக்கு பகுதிக்கு செல்லும்.

இதற்கிடையே சாக்கடை கால்வாய் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் கிடப்பில் பேடப்பட்டுள்ளதால் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குடியிருப்புக்கு முன்புள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்பு மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு குடியிருப்பு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story