சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு -  விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

காடையாம்பட்டி,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி மற்றும் குப்பூர் பகுதி விவசாயிகளின் நிலத்தை விமான நிலையத்திற்கு கையகப்படுத்துவதற்காக அளவீடு செய்ய விவசாயிகளிடம் பலமுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இன்று உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை அறிந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நிலத்திற்கு கூடுதலாக மதிப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், ஏக்கர் ஒரு கோடிக்கு விற்பனை நடந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் மதிப்பீடு குறைவாக வழங்குவதாக இருப்பதால் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.


Next Story