காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நாகை அவுரி திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் மாநில செயலாளர் நவுஷாத், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் இப்ராகிம், தி.க. மாவட்ட தலைவர் பூபேஷ்குப்தா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மணிப்பூரில் பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி கடைத்தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் லெனின், மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.