தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தமிழ்தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தென்னவன், பழ.ராஜேந்திரன், துரை.ரமேசு, தனசேகர், புண்ணியமூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டம் சூளகிரியில் தமிழர்கள் மீது இந்திக்காரர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழக அரசு வெளிமாநிலத்தவரை வெளியேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ராமு, முனியாண்டி, ஜெயக்குமார், கருணாநிதி, காமராசு, வக்கீல் செல்வநாயகம், நம் தமிழர் கட்சியை சேர்ந்த மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story