வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்


வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம்;

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி வரவேற்றார். பாபநாசம் பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ், சபை குரு ஜான்சன்சாமுவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், ராமலிங்கம எம்.பி, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பங்குத்தந்தை பிலோமின்தாஸ் நன்றி கூறினார்.


Next Story