மத்திய அரசை கண்டித்து போராட்டம்; 151 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து போராட்டம்; 151 பேர் கைது
x

மதுரை, அலங்காநல்லூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை, அலங்காநல்லூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை அருகே இருந்து ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் நந்தாசிங் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூடினார்கள். அங்கு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதை மீறி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமரேசன், ஏ.ஐ.டி.யூ..சி. மாவட்ட துணை செயலாளர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், படித்த பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 118 பேரை அலங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story