தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம்


தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம்
x

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் நடந்தது.

திருச்சி

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் மற்றும் எல்.ஐ.சி.ஏ.ஓ.ஐ. சார்பில் தமிழக அரசின் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து உணவு இடைவேளை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை கோட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் ராஜசேகர், கோட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கூறி, கண்டன கோஷம் எழுப்பினர். இதில் காப்பீட்டு கழக கோட்ட துணை தலைவர் ஜோன்ஸ், மலைக்கோட்டை கிளை தலைவர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story