புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
x

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

திருவெறும்பூர்:

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருவெறும்பூர் கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது. அபராத உயர்வை திரும்பப்பெற வேண்டும். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அணுகு சாலை அமைத்த தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story