திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்: 50 விவசாயிகள் மீது வழக்கு
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 50 பேர் கலெக்டர் அலுவலகத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாா் கலைந்து போக அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செசன்சு கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் அய்யாக்கண்ணு உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story