நெல்லியாளம் நகராட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம்


நெல்லியாளம் நகராட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் நகராட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்.) எடுத்த விவரங்களை ஒப்பந்தம் கோரும் போது இணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்படும் என டெண்டர் அறிவிப்பு கடிதத்தில் மாற்றப்பட்டு உள்ளதாக கூறியும், வருங்கால வைப்புநிதி இல்லாதவர்களின் ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்படும் என்ற விதியை மாற்றும்படி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி ஒப்பந்த புள்ளி பெறப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது வருங்கால வைப்புநிதிக்கான கணக்குகள் தாக்கல் செய்யாத ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த புள்ளியை ஏற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று விதி மீறப்பட்டதாக கூறி, கவுன்சிலர் ஜாபிர் தலைமையில் அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பந்தலூர், கூடலூர் தாலுக்காகளை சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் நடேசன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செந்தில்குமார், மகேஷ்குமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வசந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகள் டெண்டர் பணிகளை நிறுத்தி வைக்க கூறியதாகவும், வருங்கால வைப்புநிதி குறித்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story