சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x

ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது

கோயம்புத்தூர்

கோவை

ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

ரெயில் நிலையம் முற்றுகை

கோவை சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், பாலக்காடு- திருச்சி பயணிகள் ரெயில்கள் நின்று சென்றன.

கொரோனாவுக்கு பிறகு இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்பட்டன. இதனால் அந்த ரெயில்கள் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து கட்சியினர் நேற்று காலை சிங்கா நல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கினார்.

தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்

. இதில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது, நா.கார்த்திக் கூறியதாவது:-

மறியல் போராட்டம்

சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காமல் செல்வதால் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இங்கு ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டமாக ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story