கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒரு நாள் விடுப்பு எடுத்து கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை


செங்கல்பட்டு துணை பதிவாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், பால் கூட்டுறவு தணிக்கை மற்றும் வீட்டுவசதி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக பணி விடுப்பு செய்திட வேண்டியும், பால் கூட்டுறவு தணிக்கை துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இயக்குனரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாததால், மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் துணை பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் கூட்டுறவு துறை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story