கழுத்தில் தூக்கு மாட்டி நூதன போராட்டம்


கழுத்தில் தூக்கு மாட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆதித்தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்

ஆதித்தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிராஜா தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் விருதை வசந்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா குன்னூத்துப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், துணை தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குன்னூத்துப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடும் நிலத்தை கல்குவாரி அமைக்க தாரை வார்க்கக்கூடாது. விவசாயிகள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாய நிலத்தில் கல்குவாரி அமைக்கப்பட உள்ளது என்று கூறி மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


Next Story