இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் ஹரி ராமசந்திரன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சூர்யா, செயற்குழு உறுப்பினர் பிரதாப், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோரை சிறுகனூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதை கண்டித்தும், சிறுகனூர் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 3 பேரை கைது செய்ததை கண்டித்தும், அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 More update

Next Story