நாகை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


நாகை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நாகை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நாகப்பட்டினம்


நாகை தாலுகா அலுவலகத்தை தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மரிய ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் போஷன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் மதிவாணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story