மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்களை அகற்றக்கூடாது.
269 சதுரஅடி வீட்டுக்கு சேவைக் கட்டண குடிநீர் என்று இருப்பதை 500 சதுரஅடியாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சி.பத்மநாதன் தலைமையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story