ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஓய்வுதியர் சங்கம் சார்பில் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணை தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கேசவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் சத்துணவு- அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் மற்றும் வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒற்றை அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story