ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

தலைவர் எஸ்.ராசு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கார்பேகம், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும்,

70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் செயலாளர் ராம்செட்டி, சேகரன், சவுந்தர்ராஜன், ஜவகர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story