ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகர்

தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் திருவண்ணாமலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை ஓய்வூதியர் அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் சந்திரராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் ஆறுமுகம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை குறைபாடு இல்லாமல் வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வுதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும். 20 சதவீத உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 முதல் 70 வயது வரையிலான பழைய ஓய்வூதியர்களுக்கு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் ஆகவும் கடைசி ஓய்வூதியத்தில் 50 சதவீதம் வழங்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண சலுகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Related Tags :
Next Story