பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தினர். இதனை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஷம்சுல்ஹூதா தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பஷீர்அகமத், எஸ்.டி.டி.யு. மாநில தலைவர் முகமதுஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொகுதி நிர்வாகி அப்துல்காதர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story