ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட துணைத்தலைவர் காசி அம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படி சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவபடி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மாத கடைசி நாளில் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story