ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
தென்காசி
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும். 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் விரைவாக வழங்கப்பட வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வைரவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சந்திரன், மாரியப்பன், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சின்ன இசக்கி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story