விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்


விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:47 PM GMT)

விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சியில் நரசிங்கபெருமாள் கோவிலில் இருந்து பணஞ்சாலை வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் அதில் பெரிய ஜல்லிகள் போடப்பட்டு தார் சாலை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்ல முடியாமல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் சப்-கலெக்டர் பழனி இல்லாததால், அங்கிருந்த அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதில் இருளக்குறிச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் வேலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story