போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கணபதி, செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர்கள் சீனிமணி, தங்கமணி, தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஓய்வு பெறும் தொழிலாளர்களின் ஓய்வு கால பணத்தை ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் அகவிலை படியை உடனே வழங்க வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப்பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story