புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டம்


புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
x

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முத்துக்குமார், காதர் முகைதீன் அலியார், மாரீஸ்வரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சக்திவேல், மக்கள் நீதி மய்யம் காளிதாஸ், சமத்துவ மக்கள் கட்சியின் மணிமாறன், நாம் தமிழர் கட்சியின் செல்வக்குமார், காங்கிரஸ் கட்சியின் எட்வர்ட், ஆதி தமிழர் பேரவையின் அனல்மணி, தமிழ் புலிகள் வீடியல் வீர பெருமாள், தலித் விடுதலை இயக்கத்தின் பீமாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம்

கடந்த 14-10-2022-ல் கலெக்டர் அலுவலகத்தில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகத்தில் அவரிடம் இருந்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் பணம் பறிமுதல் செய்ததை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் அவரிடம் லஞ்சம் கொடுத்தாக பேசும் ஆடியோ வெளியானது உண்மையென தெரிய வந்துள்ள நிலையில் பதவியில் இருந்து வரும் பஞ்சாயத்து உதவி இயக்குனரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் அனைத்து கட்சிகளும் பஸ்நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story