தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கபணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கபணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
x

நாமக்கல்லில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு, விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் வாங்க நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. போராட்டம் காரணமாக நேற்று 62 கடன் சங்கங்கள் மட்டுமே திறந்து இருந்தன. மீதமுள்ள 103 கடன் சங்கங்கள் மூடப்பட்டு இருந்தன. கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள் 471 பேரில் 131 பேர் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். மற்றவர்கள் விடுப்பு எடுத்து தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விவசாய கடன் வழங்கும் பணி, நகைக்கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து வினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story