கரித்துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்


கரித்துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள் வெளியேறுவதை கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் எச்சரித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

அனைத்து வியாபாரிகள் சங்கம்

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கனகராஜ், பொருளாளர் கோகுல்ராம், துணைத்தலைவர் தர்பார், துணை செயலாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் சான்கான், விழுப்புரம் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் செஞ்சி கண்ணன், பொருளாளர் முத்துக்கருப்பன், பெருமாள், வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசியதாவது:-

போராட்டம்

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களால் 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகத்திடம் வணிகர் சங்கங்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரித்துகள்கள் தொடர்ந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மாற்றுவழியை ஏற்படுத்தினால் மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்த மாட்டார்கள்.

இ்வ்வாறு அவர் கூறினார். இதில் மாநில இணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், இணை செயலாளர்கள் செல்வராஜ், ஜெயபால், கிராமநிர்வாக அலுவலர் முருகன், சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story