வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர்
குற்றவியல் நடைமுறை சட்டத்தையும், இந்திய சாட்சிய சட்டத்தையும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகம் முன் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சட்ட திருத்தம் செய்வதை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், இந்திய தண்டனை சட்ட பெயரை மாற்றக்கூடாது என கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story