வனப்பகுதியில் 2-வது நாளாக போராட்டம்


வனப்பகுதியில் 2-வது நாளாக போராட்டம்
x

வத்திராயிருப்பு அருகே வனப்பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே வனப்பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியேறும் போராட்டம்

வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை ராம் நகரில் 84 மலைவாழ் மக்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாட்களில் மலைப்பாதையில் கடைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். மலைப்பகுதிக்கு சென்று தேன், கிழங்கு, பட்டை, சாம்பிராணி உள்ளிட்ட 11 வகையான பொருட்களை சேகரிப்பதற்கு வனத்துறையினர் தங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த பொருட்களை எடுக்க செல்வதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே தங்களுக்கு மலைப்பகுதி பொருட்கள் எடுக்க வழங்கிய அனுமதியை வனத்துறை திரும்ப தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் வனப்பகுதியில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

2-வது நாளாக

இதையொட்டி தங்கள் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு வனப்பகுதிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் குத்துக்கல், பூலாம்பாறை வனப்பகுதியில் குடில் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் தங்கியுள்ள மலைவாழ் மக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரையும் வீடுகளுக்கு செல்லமாட்டோம் எனவும், தங்களின் போராட்டம் தொடரும் எனவும் மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.


Next Story