டெல்லியில் காவிரி ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


டெல்லியில் காவிரி ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x

மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடக்கோரி டெல்லியில் காவிரி ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்

மன்னார்குடி;

மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடக்கோரி டெல்லியில் காவிரி ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

காவிரி விவசாயிகள் சங்க கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு பின் காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பண்டியன் நிருபர்களிடம் கூறியதாவதுகர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகதாதுவில் அணையை கட்டி காவிரியில் தமிழகம் நோக்கி வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து தமிழகத்தை பாலைவனமாக்கும் மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால் காவிரியில் நாம் பெற்ற உரிமை பறிபோய் விடுமோ? என்கிற அச்சம் தமிழக விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். இந்தநிலையில் கேரளா ஏற்கனவே மேகதாது அணை குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது கேரள அரசின் ஆதரவோடு பெரும்பான்மை மாநிலங்கள் ஒன்றுகூடி வரைவு திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு முன்வரவேண்டும்.

முற்றுகை போராட்டம்

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை வரைவுத்திட்ட அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இத்திட்டம் குறித்து விவாதிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லி ஆர்.கே.புரம் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் முன் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story