தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2023 12:30 AM IST (Updated: 30 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி.யை கைது செய்ய கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூசன் சரண்சிங்கை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஜனநாயக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சி முத்து தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் புவி ராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாநில குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட பொருளாளர் சித்ராதேவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.




Next Story