மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் வாபஸ்


மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் வாபஸ்
x

மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வை.புதூரில் இருந்து தெற்கு மையிலாடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் எரியாத காரணத்தால் அந்த மின்கம்பங்களில் நேற்று இரவு தீப்பந்தங்கள் ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மின்கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்க மின்சார துறைக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும். 7 நாட்களுக்குள் மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுபோல அப்பகுதியில் சாலை அமைக்க நிதிகோரி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக பொக்லையன் எந்திரம் மூலம் செடி கொடிகள் அகற்றப்பட்டு குண்டும் குழியுமான சாலையில் மண்ணை கொட்டி சமன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதையேற்று நேற்று நடைபெற இருந்த தீப்பந்தம் ஏற்றும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், உரிய நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வரும் டிசம்பர் 13-ந்தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story