ஜெயங்கொண்டத்தில் 21-ந் தேதி ஆர்ப்பாட்டம்; தூய்மை தொழிலாளர்களின் பேரவை கூட்டத்தில் முடிவு


ஜெயங்கொண்டத்தில் 21-ந் தேதி ஆர்ப்பாட்டம்; தூய்மை தொழிலாளர்களின் பேரவை கூட்டத்தில் முடிவு
x

ஜெயங்கொண்டத்தில் 21-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தூய்மை தொழிலாளர்களின் பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஏ.ஐ.டி.யூ.சி. தூய்மை தொழிலாளர்களின் பேரவை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்டரங்கில் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க செயலாளர் தம்பிசிவம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க தலைவரும், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளருமான தண்டபாணி கலந்து கொண்டு தொழிலாளர் பிரச்சினைகள், சங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ராமநாதன் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்பட்ட 15 மாத இருப்பு தொகை கிடைக்க செய்திட வேண்டும். நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கு சேர்ந்த காலத்தில் இருந்து நடப்பு ஆண்டு வரை பி.எப். இருப்பை வட்டியுடன் கணக்கு தொகை கொடுக்கப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. குடும்ப மருத்துவ அட்டை வழங்கப்பட வேண்டும். தூய்மை பணிக்கு உரிய தளவாட ெபாருட்கள், கொடுக்காமல் வேலையை செய்ய நிர்பந்தம் செய்வது, பணிக்கு உரிய கருவிகளை கேட்டால் வேலையை விட்டு நிறுத்துவோம் என கூறுவதை நகராட்சி நிர்வாக கைவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 21-ந் தேதி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தூய்மை பணியாளர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story