மணிப்பூரை பாதுகாக்கக் கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்


மணிப்பூரை பாதுகாக்கக் கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
x

குடியாத்தத்தில் மணிப்பூரை பாதுகாக்கக் கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.

வேலூர்

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் தேசிய மாதர் சம்மேளனம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மணிப்பூரை பாதுகாப்போம், வெறுப்பு அரசியலை வேரறுப்போம், நிர்வாணப்படுத்தப்பட்டது மணிப்பூர் பெண்கள் மட்டுமல்ல பாரத தாயும் தான் என நீதி கேட்டும், கலவரத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசை பதவி விலக கோரியும் ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மாதர் சம்மேளனம் கே.கல்பனாசந்தர், விவசாயிகள் சங்கத்தின் எஸ்.மகேஷ்பாபு, இளைஞர் பெருமன்றத்தின் எல்.நிறைமதிசெல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த கு.விநாயகம், நா.பரமசிவம், என்.ஜீவானந்தன், அத்தாவுல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம், நகர செயலாளர் டி.ஆனந்தன், இளைஞர் மன்ற மாவட்ட குழு உறுப்பினர் எம்.மகேஷ் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பஸ் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் மணிப்பூரை பாதுகாப்போம், வெறுப்பு அரசியலை வேரறுப்போம் என்றும், மத்திய, மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசை பதவி விலகக் கோரியும் அஞ்சல் அட்டை அனுப்பினர்.


Related Tags :
Next Story