மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் வன்முறையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது
திருவாரூர்
மன்னார்குடி;
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் துன்புறுத்தப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர தலைவர் ஆர்.கனகவேல், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வடுகநாதன், சந்திரசேகரன், மன்னார்குடி மேற்கு வட்டார தலைவர் செல்வராஜ் கிழக்கு வட்டார தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story