சமூக நல்லிணக்க மனித சங்கிலி
சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடந்தது.
சமூக நல்லிணக்க ஜனநாயக அமைப்புகள் சார்பில் ராமநாதபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் தலைமை வைத்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல பொறுப்பாளர் யாசின் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.மலேசியா பாண்டியன், ரமேஷ்பாபு, கோபால், நகர்தலைவர் கோபி தலைமையில் காங்கிரசாரும் இ.கம்யூ கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிவாஜி, கலையரசன் உள்ளிட்டோரும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் சிராஜுதீன் தலைமையிலும், ம.ம.க. சார்பில் அன்வர் தலைமையிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஜமீல் தலைமையிலும், தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையிலும், பெரியார் பேரவை சார்பில் நாகேசுவரன் தலைமையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மதவெறி அமைப்புகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து கைகளை கோர்த்தவாறு மனித சங்கிலியாக மத்திய கொடி மரம் வரை வரிசையாக நின்றனர்.