வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்


வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 21 July 2023 12:30 AM IST (Updated: 21 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

தென்காசி

சுரண்டை:

நெல்லை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சச்சின் டி ஷெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ''வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0'' என்ற நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இந்த திட்டம் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும்.

''வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0'' நிகழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. அதாவது தென்காசி மாவட்டத்துக்கு சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி,யில் நடக்கிறது. வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story