வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம்


வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம்
x

ராணிப்பேட்டையில் வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.

ராணிப்பேட்டை

மத்திய தொழிலாளர் அமைச்சகம் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்-2.0 நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி நடத்தவும், இதனை வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைதீர்வு கூட்டம் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி இந்த மாதத்துக்கான வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில்-2.0 நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை காம்ப்ளக்சில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் வைப்புநிதி திட்டங்களின் பயன்களையும் பெற்று கொள்ளலாம்.

இந்த தகவலை வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரிதுராஜ்மேதி தெரிவித்துள்ளார்.


Next Story