கரூர் மாவட்ட போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா வழங்கல்
கரூர் மாவட்ட போலீசாருக்கு சீருடையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 9 சீருடைகளில் பொருத்தக் கூடிய கேமராக்களை சட்டம், ஒழுங்கு பணியில் உள்ள போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வழங்கினார். இந்த கேமராக்கள் சட்டம், ஒழுங்கு பணியின் போதும், குற்ற வழக்குகளை விசாரணை செய்யும் போதும், குற்ற வழக்குகள் மற்றும் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் போன்ற நேரங்களிலும், வாகன சோதனையின் போதும் பயன்படுத்தப்பட உள்ளனர். இந்த கேமராக்கள் 4 மணி நேரம் வீடியோ பதிவுகளை சேமிக்கும் திறன் கொண்டதாகும்.
Related Tags :
Next Story